உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்குகள் அனைத்தும் ஜனவரி 31ல் விசாரணை
Jan 27, 2017
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று தமிழகத்தில் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து அதனை தமிழக சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், கியூப்பா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.
ஜல்லிக்கட்டு மீதான வழக்குகள் அனைத்தும் ஜனவரி 31ல் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்குகள் அனைத்தும் ஜனவரி 31ல் விசாரணை”