மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உத்திரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் இன்று துவங்கியதுFeb 11, 2017

உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று துவங்கி மார்ச் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

siragu-election

இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் ஒரு அணியாக போட்டியிருகின்றன. மேலும் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, ராஷ்ட்ரீய லோக்தள் போன்ற கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.

முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 73 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. கலையிலேயே மிக விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

மார்ச் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு வெளியிடப்படவுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உத்திரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது”

அதிகம் படித்தது