மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உத்திரப்பிரதேசத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியதுFeb 23, 2017

403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 3 கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

Siragu election

காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். 4ம் கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் 12 மாவட்டங்களில் உள்ள 53 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பா.ஜ.க, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. பிப்ரவரி 27, மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்ட தேர்தல் முடிவடைந்த பின் மார்ச் 11ம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உத்திரப்பிரதேசத்தில் 4ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது”

அதிகம் படித்தது