உயர்நீதிமன்றம்: கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை
Nov 21, 2016
திருநெல்வேலி கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனங்கள் தமக்குத் தேவையான தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுத்து வருகின்றனர்.
அதன்படி கோகோ கோலா நிறுவனம் தொடக்கத்தில் 3 லட்சம் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி பெற்று தற்போது 10 லட்சம் தண்ணீர் எடுத்து வருகிறது. இதேபோல் பெப்சி நிறுவனமும் தமக்கு தேவையான தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது. இந்த விசாரணையின் முடிவில் கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை”