மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்Jan 11, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை அமைக்கப்படாதது குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக சட்டசபை விதிகளின்படி பொதுக்கணக்குக் குழு, பேரவை விதிகள் குழு உள்ளிட்ட 12 சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வழக்கமாக புதிய பேரவை அமைக்கப்பட்டு முதல் கூட்டம் துவங்கிய 15 நாட்களுக்குள் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுவிடும்.

siragu-chennai-highcourt

15வது பேரவை மே மாதம் அமைக்கப்பட்டது, ஆனால் ஐந்து மாதங்களாகியும் எந்தக் குழுவையும் பேரவை தலைவர் அமைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டசபை செயலர், சபை முன்னவர், தலைவர் செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை ஜனவரி 19க்கு ஒத்தி வைத்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது