மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்ற மதுரை கிளை: சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்



Feb 27, 2017

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Siragu seemai karuvela tree1

சீமைக் கருவேல மரங்கள் நீக்குவதை கண்காணிக்க மாவட்டத்திற்கு 5 பேர் உட்பட 65 வழக்கறிஞர், ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 10ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதால், மீதம் உள்ள 19 மாவட்டங்களின் ஆட்சியர்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும் விசாரணையில் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி முழுமையாக நிறைவடையவில்லை என்று வைகோ கூறினார். இம்மரங்களை அழிக்க 20 நாட்கள் அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற பொழுது சீமைக் கருவேல மரங்களை அகற்ற மேலும் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது. மேலும் இதற்காக இரண்டு மாதங்களுக்குள் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்ற மதுரை கிளை: சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்”

அதிகம் படித்தது