மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகை அச்சுறுத்தும் தொற்றுநோய்கள்

சிறகு நிருபர்

Aug 15, 2020

siragu coronavirus2
தற்போது உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கு தற்போது வரை உலகளவில் 2.11 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7.58 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இத்தொற்று நோய்க்கு முன்பாக உலகில் தோன்றிய தொற்று நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1. கி.மு. 430 லேயே ப்ளேக் ஆப் ஏதென்ஸ் (Plague Of Athens) என்னும் கொள்ளை நோய் முதன்முதலாக உருவாகியுள்ளது. இந்நோயால் லிபியா, எகிப்து, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்தியது.

2. கி.பி. 165 ல் ஆன்டனைன் பிளேக் (Antonine Plague) என்னும் கொள்ளை நோய் ஜெர்மனியர்களையும், பின்னர் ரோமானியர்களையும் பாதித்தது.

3. கி.பி. 250 ல் வட அமெரிக்காவிலிருந்து பரவி பிரிட்டனை தாக்கியது சைப்ரிய பிளேக் (Cyprian Plague) என்னும் கொள்ளை நோய்.

4. கி.பி. 541 ஜஸ்டினைன் பிளேக் (Plague of Justinine) என்னும் கொள்ளை நோய் எகிப்தில் தொடங்கி மத்திய தரைப்பகுதியைத் தாக்கியது. இந்நோயால் 5 கோடி மக்கள் இறந்தனர், இந்நோய் புபோனிக் ப்ளேக்கின் தொடக்கமாகக் கருதப்பட்டது.

5. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பலி வாங்கிய கருப்பு மரணம் (Black Death) என்ற கொள்ளை நோய் 1350ல் தோன்றியது. ஆசியாவில் தொடங்கி ஐரோப்பாவைத் தாக்கிய இந்நோய் புபோனிக் பிளேக்கின் இரண்டாம் அலை.

siragu virus2

6. 1492 ல் சின்னம்மை, பிளேக் போன்ற நோய்கள் கரிபிய பகுதியைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து கொலம்பஸ், ஹிஸ்பானியோலா போன்ற தீவிலும் பரவியது.

7. 1665 ல் புபோனிக் பிளேக் நோயின் அடுத்த தாக்கம் தொடங்கியது. இந்நோய் தேம்ஸ் நதிக்கரை முழுவதும் பரவியது. இந்நோயால் லண்டன் மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மாண்டனர்.

8. 1817 ல் காலரா நோய் முதன்முதலில் தாக்கியது. 150 ஆண்டுகளில் பத்து லட்சம் பேரை பலி வாங்கிய காலரா நோய் ரஷ்யாவில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்கள் மூலம் இந்தியாவிலும் பரவியது இந்நோய்.

9. 1855 ல் புபோனிக் ப்ளேக்கின் அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது. சீனாவில் இருந்து துவங்கிய இந்நோய் ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட பகுதிக்கு பரவியது. இந்நோய்க்கு 1.50 கோடி மக்கள் பலியாகினர்.

10. 1875 ம் ஆண்டு பிஜி தீவில் தட்டம்மை நோய் பரவியது. அதில் நாற்பதாயிரம் பேர் பலியாயினர்.

11. 1889 ஆம் ஆண்டு சைபீரியாவில் துவங்கிய புளூ காய்ச்சல் பின் மாஸ்கோவை தாக்கியது. அதன்பின் போலந்து, பின்லாந்தையும் தாக்கியது. இந்நோயால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

12. 1918-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவை உலுக்கியது ஸ்பானிஷ் புளூ காய்ச்சல். ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை தாக்கியது. இதில் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

13. 1956-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய ஆசியன் புளூ என்னும் கொள்ளை நோய் அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் பரவியது. இந்நோயால் உலக அளவில் இருபது லட்சம் பேர் பலியாயினர் என்று உலக சுகாதார அமைப்பு கூறிகிறது.

14. 1981-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி/எயிட்ஸ் நோய் சிம்பன்சி குரங்குகள் மூலம் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நோயின் தாக்கத்தை குறைக்க சிகிச்சை கண்டறியப்பட்டாலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

15.  2003 ம் ஆண்டு சார்ஸ் என்ற நோய் சீனாவிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியது. இந்நோய் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது. இந்நோயைத் தொடர்ந்து எபோலா, ஜிகா, பறவை காய்ச்சல் ஏற்பட்டு தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. இதன் வரிசையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகை அச்சுறுத்தும் தொற்றுநோய்கள்”

அதிகம் படித்தது