எதிர்பார்ப்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும்
Feb 11, 2017
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தீர்ப்பு வராததால் சசிகலா முதல்வர் பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வரும் என்பதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலாவிற்கு அழைப்பு விடுக்காமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை சொத்துக்குவிப்பின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தீர்ப்பு அறிவிக்கும் உச்சநீதிமன்ற பெஞ்ச் வரிசையில் இந்த வழக்கு இல்லாததால், திங்கட்கிழமை தீர்ப்பு இல்லை என்றும், செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்பார்ப்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும்”