மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எம்.எல்.ஏ தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வுFeb 11, 2017

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிறைவைக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக், செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர்.

Siragu admk-mla

தமிழகத்தில் அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள இந்நிலையில், சசிகலா 134 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு உள்ளதாகவும், முதல்வர் ஓ.பி.எஸ் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக், செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர். எம்.எல்.ஏ-க்களில் சிலர் தாங்கள் சிறைவைக்கவில்லை என்றும் சுதந்திரமாகவே இருக்கறோம் என்று கூறி வருகின்றனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எம்.எல்.ஏ தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வு”

அதிகம் படித்தது