ஐதராபாத்தில் வெள்ளம்
Sep 25, 2016
கடந்த 20ந்தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் ஐதராபாத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிப்படைந்த 6000 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குமாறு மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐதராபாத்தில் வெள்ளம்”