ஓ.பி.எஸ். அணி எம்.பி.-க்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்: ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்
Feb 28, 2017
ஜெயலலிதா-வின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா-வின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதன் தொடர்பாக, இன்று(28.02.17) மைத்ரேயன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி-க்கள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்திக்க டெல்லி சென்றனர். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பி.எஸ். அணி எம்.பி.-க்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்: ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்”