மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கட்டுரைகளை சேமித்து பிறகு படிக்க உதவும் செயலிகள்(Offline Reading Apps)

சௌமியன் தர்மலிங்கம்

Feb 21, 2015

Siragu tamil ebook7இணைய தளங்களில் வெளியாகும் ஏராளமான கட்டுரைகள் மிக நீண்டதாகவும், அதிக தகவல்களைக் கொண்டதாகவும் பிற்காலங்களில் தேவைப்படுவதாகவும் அமைந்திருக்கும். அவற்றைத் தரவிறக்கி சேமித்து நேரம் கிடைக்கும் பொழுது இணைய இணைப்பு இல்லாமலேயே பொறுமையாக வாசிக்க நாம் விரும்புவோம். தற்போது இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பல்வேறு செயலிகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் சிறப்பாக இயங்கும் ஒருசில செயலிகளின் பயன்பாடுகளையும் அவற்றின் சுட்டிகளையும் கீழே தொகுத்துள்ளோம். இணைய வாசிப்பு மற்றும் மின் புத்தகங்கள் வாசிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க நாம் வெளியிடும் மற்றொரு அருமையான கட்டுரை இது.

கீழே தொகுக்கப்பட்டுள்ள செயலிகள் அனைத்தையும் நாம் பயன்படுத்தும் முறை எளிமையானது. முதலில் செயலியின் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்துவிட வேண்டும். பிறகு உங்களது அலைபேசி அல்லது Tablet கணிணியில் விரும்பும் செயலியை தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒவ்வொரு செயலியின் Google chrome Browser Plugin- தனை நிறுவிக்கொள்ள வேண்டும். பிறகு நாம் விரும்பும் கட்டுரைக்குச் சென்று Right Click செய்து விரும்பும் செயலியில் சேமித்துக்கொள்ளலாம். அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுது அலைபேசி அல்லது Tablet கணிணிகளில் வாசிக்கலாம்.

Pocket:

இந்த செயலி android மற்றும் ios தளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. கணிணியில் சேமித்த பிறகு இந்த செயலியை Refresh செய்தால் நீங்கள் சேமித்த கட்டுரைகள் தேவையற்ற விளம்பரம் நீக்கி படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதில் கட்டுரைகள் மற்றும் செய்திகள் என பல பகுதிகளாக பிரித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் படித்து விரும்பிய கட்டுரைகளை உங்களது நண்பர்களுடன் பகிர்துகொள்ளலாம்.

Readability:

இந்த செயலி android மற்றும் ios தளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி விளம்பரமின்றி கணிணியின் மூலமாகவும் உடனே படிக்கும் வசதி இருக்கின்றது மற்றும் மற்ற கணிணி சாதனங்களிலும் படிக்கலாம். இதிலும் விரும்பிய கட்டுரைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Instapaper:

இதில் பதிவு செய்வது மிகவும் எளிதானது. இதனை நீங்கள் உபயோகப்படுத்தும் பொழுது நாளிதழ் வாசிப்பது போன்ற உணர்வு தோன்றும். இந்த செயலியும் android மற்றும் ios தளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. இதில் வருட சந்தா செலுத்தினால் அதிக பயன்களைப் பெறலாம்.

Evernote:

இந்த செயலியில் கட்டுரைகளை தரவிறக்கம் செய்யும் பொழுது தேவையான வரிகளை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம். இதனை கணனி மூலம் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்யும் பொழுது நமக்குத் தேவையான பத்திகளை மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த செயலியும் android மற்றும் ios தளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது.

Readit:

இந்த செயலி android தளங்களில் மட்டும் இலவசமாகக் கிடைக்கின்றது. இதில் நண்பர்களுடன் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளும் வசதி இல்லை.

 


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கட்டுரைகளை சேமித்து பிறகு படிக்க உதவும் செயலிகள்(Offline Reading Apps)”

அதிகம் படித்தது