மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கரோனா முடியுமா? இல்லையா முடிய விடமாட்டார்களா?

வெங்கட் நடராஜன்

Jan 15, 2022

siragu covid3

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படுவதாக வரலாறு கூறுகிறது. அப்படி ஏற்படும் தொற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடும். அப்படியெனில் 2019 ல் தோன்றிய கொரோனா 2020 ல் முடிவுக்கு வரவேண்டும். அது முடிவுக்கு வர தயாராக இருந்தாலும், முடிய விடுவார்களா என்பது சந்தேகமே.

இதற்கு முன்பு, ப்ளேக் (1720), காலரா (1817), ப்ளூ (1919) போன்ற கொள்ளை நோய்கள் ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறது.எடுத்துக்காட்டாக ஸ்பானிஷ் ப்ளூ 1918 ல் இருந்து 1920 வரை அதிக வீரியத்துடன் ஏராளமான மக்களை பாதித்துள்ளது. ஆனால் அது முற்றிலும் முடியாமல் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என உருமாறி ஆண்டு தோறும் குளிர் காலத்தில் தவறாமல் வந்து 5 லிருந்து 7 இலட்சம் வரை கொன்று விட்டு தான் செல்கிறது. மேலும் கோடிக்கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது. இத்தனைக்கும் வருடா வருடம் தடுப்பூசி போட்டுக்கொண்டு தான் உள்ளார்கள், அப்பொழுதும் வருகிறதே அது ஏன்?

மருந்து நிறுவனங்கள்

5 – 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ப்ளூ மருந்து வர்த்தகம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைப்பெறுகிறது. இப்பொது கொரோனவும் சேர்ந்துவிட்டது. அதனால் மருந்து நிறுவங்களுக்கு வர்த்தகம் மேலும் பெருகும். 100 ஆண்டுகளாகியும் ஸ்பானிஷ் ப்ளூ வையே இன்னும் முடிக்காதவர்கள், நேற்று வந்த கரோனாவையா விட்டுவிடுவார்கள்?

ப்ளூ தடுப்பூசியாவது ஒரு வருடம் வரை தாங்குகிறது. கோவிட் தடுப்பூசி ஆறு மாதத்திற்கு ஒருமுறை போடவேண்டும். எனவே இது இரட்டை இலாபம் கொடுக்கும் தொழில். கோவிட் வைரஸே தன்னால் போனால் கூட, மாத்திரை கம்பெனிகள் அதை போக விடமாட்டார்கள். காத்திருந்த வேட்டைக்காரனுக்கு கிடைத்த நல்வேட்டைப் போல அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள்.

பொங்கல் தீபாவளி பண்டிகைக்கு புதுப்படம் ரிலீஸ் செய்வதுபோல், டெல்டா, ஓமிக்ரான் என பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள். மருந்து கம்பெனிகள் ஊடகங்களுக்கு செய்தியை உருவாக்குகின்றன. ஊடகங்கள் ஊடே மக்களை பயமுறுத்தி தம் மருந்துகளை செல்லுபடி செய்கின்றன. சக்தி வாய்ந்த அமைப்புகளுடன் இணைந்து விமான சேவை போன்ற முக்கிய சேவைகளை தடை செய்கிறார்கள். வைரஸை தலைப்புச் செய்தியாக்குகிறார்கள். கூட்டு நுண்ணோக்கியில் காண்பது போல் பிரச்சினையை பூதாகர மாக்குகிறார்கள். மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறார்கள். அன்றாட வாழ்க்கையை முடக்குகிறார்கள்.

இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இதை விடமாட்டார்கள். இந்த தலைமுறை மறந்து அல்லது மறைந்து போனால் அடுத்த தலைமுறைக்கு இது பருவகால ப்ளூ போல் பழகிவிடும். அவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க மாட்டார்கள். ப்ளூ வோடு சேர்த்து மறக்காமல் கோவிட் தடுப்பூசியும் போட்டுக்கொள்வார்கள். மருத்துவ உலகின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.

தடுப்பூசி எந்த அளவுக்கு தடுக்கிறது?

கொரனவை விடுங்கள். ப்ளூ தடுப்பூசி எந்த அளவுக்குச் செயல்படுகிறது? 100 ஆண்டு காலமாக மக்கள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், இருந்தாலும் ஆண்டுதோறும் பலர் இறக்கத் தானே செய்கிறார்கள் அது ஏன்? தடுப்பூசி போடாமல் விட்டால் ஆரம்பத்தில் இறப்பு விகிதம் அதிகமாக தான் இருக்கும். ஆனால் போகப் போக உடலில் நோய் எதிர்க்கும் தன்மை அதிகமாகி வைரஸ் காணாமல் போய்விடும்.

தடுப்பூசி ஏன் கட்டாயம்?

அரசாங்கம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்ற முடிவெடுக்கும் உரிமையை கொடுக்கவேண்டும்.

விமான சேவையில் ஆரம்பித்து உணவு விடுதி வரை தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அனுமதி மறுக்கப்படுகிறது. இது மக்களாட்சி முறையில் ஏற்கத் தக்கதல்ல.நிறைய மக்கள் அவர்தம் பணியை செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

தடுப்பூசி போடுங்கள், மருந்து அமோகமாக விற்பனைச் செய்யுங்கள். ஆனால் எல்லோரும் உங்கள் சுயநலக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நிர்பந்திக்காதீர்கள்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கரோனா முடியுமா? இல்லையா முடிய விடமாட்டார்களா?”

அதிகம் படித்தது