மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புJan 21, 2017

தாய்லாந்து அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று தமிழக கடலோர பகுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

siragu-rain2

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரையில் கடலிலும், கடற்கரையிலும் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு”

அதிகம் படித்தது