மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று தமிழக ஆளுநர் உறுதிOct 14, 2016

காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் கூறியுள்ளார்.

siragu-governer

இவர் தன் மனைவியுடன் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிப்பாட்டிற்காக சென்றிருந்தனர். அதைத் தொடர்ந்து சென்னை தமிழ் சங்கம் சார்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சென்னை சட்ட கல்லூரியில் படித்தபோது திருவள்ளுவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கல்வியில் திருக்குறளை கொண்டு வரவேண்டும்.

மேலும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்சனைகள் எனக்குத் தெரியும் அதனால் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று தமிழக ஆளுநர் உறுதி”

அதிகம் படித்தது