மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி: முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி எச்சரிக்கைSep 25, 2016

காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து நேற்று(23.09.2016) கூடிய கர்நாடக சட்டசபை கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினர். இதன் எதிரொலியாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான ஏ.கே.கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
kanguly
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை யாராலும் மீற இயலாது என்றும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காவிரி வழக்கு மீண்டும் இம்மாதம் 27ந்தேதி உச்சநீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது. அன்று தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு தண்டனை காத்திருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி: முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி எச்சரிக்கை”

அதிகம் படித்தது