மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி டெல்லியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்Nov 24, 2016

காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. எனவே தங்களது பிரச்சனைகளை பிரதமர் கேட்பார் என்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் டெல்லி சென்றனர். அனால் அவர் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

siragu-farmers

எனவே நேற்று டெல்லி ஜந்தர் மந்திரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் மற்றும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது இவர்களது வேண்டுகோள்.

மேலும் காவிரி தொடர்பான பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவைக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது, மத்திய அரசின் வேளாண் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளையும், அமைப்பு சாரா தொழிலாளர்களையும் பாதிக்கிறது. இதனால் தமிழக டெல்டா விவசாயிகள் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி டெல்லியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்”

அதிகம் படித்தது