மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரிடம் புதிய ரூபாய் நோட்டுக்கள்



Nov 22, 2016

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்தோபோராவில் உள்ள ஹன்ஜன் கிராமத்தில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

siragu-pakistan2

இத்தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் 15000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அந்த தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட 15000 ரூபாய் ரொக்கப்பணத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இரண்டு இருந்தது. இவர்கள் காஷ்மீர் நுழைந்த பிறகு இந்த புதிய நோட்டுக்களை பெற்றிருப்பார்கள் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரிடம் புதிய ரூபாய் நோட்டுக்கள்”

அதிகம் படித்தது