காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உட்பட 5 பேர் பலி
Jan 25, 2017
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோனாமார்க் நகரில் பனிச்சரிவு ஏற்பட்டது. அந்நகரில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் எட்டு ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜம்மு-காஷ்மீர், குரெஸ் என்ற பகுதியில் உள்ள படூகம் என்ற கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு தொடங்கியதை அடுத்து மலையோரத்தில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உட்பட 5 பேர் பலி”