மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்புJan 11, 2017

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து விமான நிலையங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

siragu-security-forces

மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தின் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் சென்னை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு”

அதிகம் படித்தது