மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சக்தி காந்த தாஸ்: அரசு அலுவலர்களின் சம்பளம் ரொக்கமாக கிடையாதுNov 23, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

siragu-sakthi-kandhadoss

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மாத சம்பளப் பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு அலுவகங்களில் மின்னணு பரிவர்த்தனையை செயல்படுத்த, அரசு ஊழியர்களின் மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என மத்திய பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சுங்கச்சாவடியில் மின்னணு முறையில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ஆன்-லைன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு டிசம்பர் 31 வரை சேவைக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சக்தி காந்த தாஸ்: அரசு அலுவலர்களின் சம்பளம் ரொக்கமாக கிடையாது”

அதிகம் படித்தது