சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி வழக்கு
Feb 13, 2017
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவை சட்டசபை தலைவராக தேர்வு செய்தனர். பின் அதனை ஏற்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சசிகலா விரைவில் முதல்வர் பதவியேற்க உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தான் கட்டாயப்படுத்தப்பட்டதால் ராஜினாமா செய்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதன்பிறகு பன்னீர்செல்வத்தை 7 எம்.எல்.ஏ-க்களும், 11எம்.பி-க்களும் ஆதரித்து தெரவித்துள்ளனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இந்நிலையில் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் திடீரென சசிகலாவுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சசிகலாவிடம் உள்ளது, ஆனால் இதுவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. எனவே 24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று எம்.எல்.சர்மா அளித்த மனுவில் உள்ளது.
இன்றைக்குள் சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்று சுப்ரமணியம் சாமி தனது டுவீட் பக்கத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி வழக்கு”