சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Feb 28, 2017
அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக-வின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று அதிமுக-வின் சட்ட விதிகளில் உள்ளது. ஆனால் கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது.
கட்சியின் தேர்தலை நடத்த சுதந்திரமான அதிகாரியை நியமிக்க வேண்டும், சுயமான நியமனம் செய்து கொண்ட பொதுச்செயலாளர், எந்த முடிவு எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஜனவரி 20ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கட்சிப் பொதுச்செயலாளரை நியமிப்பதற்கு தனி அதிகாரி ஒருவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபொழுது, பொதுச்செயலாளராக நியமித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அள்ளித்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கே.சி.பழனிச்சாமி இம்மனுவை வாபஸ் பெற்றார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி”