மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமத்துவ நீதி உலகில் உள்ளதா!?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 4, 2020

siragu samaththuva needhi1

வில்லி சிம்மோன்ஸ் (Willie Simmons) அலபாமாவைச் சேர்ந்த 62 வயது கறுப்பினத்தவர், $9 திருடியதற்காக 38 ஆண்டுகள் சிறையில் இருக்கின்றார். அலபாமாவின் habitual Offender Law வின் படி (அதற்கு முன் 3 முறை அவர் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளார்) 1982 ஆம் ஆண்டு அவருக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஷெல்புரனே (Shelburne) என்ற ஊடகவியலாளர் அவரோடு பேசிய போது சிம்மோன்ஸ் தன்னைப் பற்றி சொன்ன விவரங்கள்:

சிம்மோன்ஸ் இராணுவத்தில் வேலை செய்து வந்த போது போதை பொருளுக்கு அடிமையாகி ஒரு சண்டையில் ஒருவரின் 9$ திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. சிம்மோன்ஸ் குற்றத்தை மறுக்கவில்லை. அந்த சண்டையின் போது தான் போதை மருந்தின் தாக்கத்தில் இருந்தததையும் குற்றத்தையும் அவர் ஒப்புக் கொள்கின்றார். தன்னுடைய சகோதரி 2005 இல் மறைந்தபின் தன்னை பார்க்க யாரும் வருவதில்லை என்றும் தான் ஒரு தனிமையான மனநிலையில் இருப்பதாகவும் அவர் பதிவு செய்கிறார்.

அவருடைய விசாரணை பற்றிக் கூறும் போது 25 நிமிடங்களே அவருடைய நீதி விசாரணை நடந்ததாக நினைவு கூறுகின்றார். அவருடைய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எந்த சாட்சிகளையும் அழைக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர்கள் தன்னுடைய முந்தைய குற்றங்களின் தன்மை கடுமையானதாக இல்லாத போதும், தான் குற்றமற்றவன் (offer a plea deal) என்று கூற ஒரு வாய்ப்பைத் தரவில்லை என்றும் பதிவு செய்கின்றார். பல முறை பல மேல்முறையீடுகள் அவர் பதிவு செய்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை வேதனையோடு கூறுகின்றார். பல நேரங்களில் விண்வெளியில் துலைந்தது போன்ற உணர்வு வருகின்றது என்று வருத்தத்துடன் கூறுகிறார் சிம்மோன்ஸ். 2014 இன் படி பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கான மேல் முறையீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றபோதும் இந்த கொடுமையான தண்டனையில் இருந்து தான் ஒரு நாள் விடுதலை பெற்று ஒரு திருமணம் செய்து கொண்டு, போதை பொருட்களுக்கு எதிரான தன் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதாக சிம்மோன்ஸ் அந்த ஊடகவியாலளரிடம் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை “The Other Side Of Black History “என்ற முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது. பெரும்பாலும் இத்தகைய குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கி குற்றவாளிகள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை சட்டம் ஏற்படுத்தி தர வேண்டும். சட்டத்தின் தன்மை ஒரு மனிதனை தண்டிப்பதை விட அவனை திருத்துவது, அவன் குற்றத்தை எண்ணி வருந்துவது என்ற நிலையை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தை நோக்கி சட்டம் பயணிக்க வேண்டும் என்று பல நாட்டின் வழக்கறிஞர்கள் விரும்புகின்றனர்.

Rehablitation is need of the hour than Punishment.

Rehabilitation does not ignore society and the victim. By seeking to reduce re-offending and to reduce crime, it seeks to constructively reduce public nuisance and protect other members of the society. Such a model of punishment is therefore a more enlightened approach in a modern day criminal justice system.

மறுவாழ்வு கைதிகளுக்கு அமைத்து தந்து சமூகத்தை குற்றவாளிகளின் தொந்தரவில் இருந்து காப்பது தான் கிரிமினல் ஜஸ்டிஸ் என்பதின் நோக்கமாக இருக்க வேண்டும்!

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டும் 15-20% மனநோயால் சிறையில் பாதிக்கப்பட்டிருப்பதாக U.S. Department of Justice என்ற அமைப்பு கூறுகின்றது. குற்றவாளிகள் மீண்டும் சமுகத்தில் சுமூகமாக வாழும் வகையை ஏற்படுத்தி தருவதே நாகரீகமடைந்த ஒரு நீதித்துறையும் சட்டமும் செய்ய வேண்டியப் பணி .

இதில் உள்ள மற்றொரு சிக்கல் கறுப்பர்களை கடுமையாக தண்டிக்கும் அளவிற்கு மற்றவர்களை இந்தச் சட்டம் இது போன்ற சிறு குற்றங்களுக்கு தண்டிக்கின்றதா என்றால் அதன் சதவீதம் குறைவு தான். இந்தியா போன்ற நாடுகளில் இசுலாமியர்களும் தலித் மக்களும் எந்த நீதி விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கும் கொடுமையையும் இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டி உள்ளது. ஒரு சமயம் தமிழ்நாட்டில், சென்னையில் 75 ருபாய் திருடியதற்காக 9 ஆண்டுகள் சிறை என்ற வினோத தண்டனையையும் பல ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞராக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார்த்ததுண்டு. குற்றம் சிறியதோ பெரியதோ குற்றம் தண்டனைக்குரியது தான் என்றாலும் பசிக்கு திருடுகிறவனுக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனை குற்றத்தை தொழிலாக செய்பவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற விசித்திரத்தையும் பதிவு செய்ய வேண்டி உள்ளது. சமத்துவ நீதி என்பதே உலகளவில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே சட்டத்தின் பயனை வீணடிக்கின்றன!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமத்துவ நீதி உலகில் உள்ளதா!?”

அதிகம் படித்தது