மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா

க.தில்லைக்குமரன்

Jan 23, 2016

Student commits suicideஇந்திய ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய அம்சம் அனைத்து இந்தியர்களும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின் கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது. எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த கொடுங்கோலரசு.

பட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும் ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும் மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதும்தான்.

saadhiveri6மானியமும், கல்வியும் கேள்விக்குறியானதில் மனமுடைந்த இருபத்து ஆறே (26) வயதாகிய ரோகித் வெமுலா எனும் ஆராய்ச்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். ‘கார்ல் சாகன்’ போன்று அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ரோகித் ஒரு அருமையான மாணவர், ஒரு நல்ல மாணவர். பா.ஜ.க மற்றும் ABVP அமைப்பினரின் வெறுப்பு அரசியலால் மரணம் அடைந்தது, அந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மரணமல்ல, இந்துத்துவ வெறியர்களின் திட்டமிட்ட கொலை என்று உலக ஊடகங்களும் எழுதத் துவங்கியுள்ளது. ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி வேண்டி SC/ST பேராசிரியர்களும், அதிகாரிகளும் பல்கலைக்கழக பணியிலிருந்து விலகி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிஞர் பலர் இப்பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய பட்டங்களை திருப்பி அளிக்கவும் துவங்கியுள்ளனர்.

saadhiveri3இந்த மரணத்தை கண்டித்து இந்தியாவெங்கும் அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கன்டன ஆர்ப்பாட்டம் செய்து வரும் வேளையில், கன்டன ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் நடைபெறத் துவங்கியுள்ளது. சனவரி 22-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் எதிரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ரோகித் வெமுலாவின் மரணத்திற்குக் காரணமான ABVP மற்றும் பா.ஜ.க தலைவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மனுவும், துணைத்தூதரக அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. பெருமழை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இது போலவே மிசிகன், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது இந்தியாவிற்கு ஒரு பெரும் அவமானத்தை உலக அரங்கில் பெற்றுத்தந்துள்ளது என்பது மிகையல்ல.

saadhiveri2பல நூறு ஆண்டுகளாக ஆதிக்க சக்திகள், சாதிவெறியினால் கீழ்த்தட்டு மக்களை ஒடுக்கி வந்துள்ளன. இந்த கோர வழக்கம் 500 ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் கோரவெறியுடன் நடந்து வருகிறது. பாண்டியர்களின் தோல்விக்குப்பின் தமிழகத்தை ஆண்ட அந்நிய அரசுகள் வர்ணாசிரமத்தை முழுமூச்சுடன் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களின் மீது இந்த சாதி அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டன. திருமலைநாயக்கர்கள், மராத்திய, தெலுங்கு, கன்னட அரசுகள்தான் வர்ணாசிரமத்தை தமிழர்களின் மீது தீவிரமாக திணித்து சாதி ஏற்றத்தாழ்வுகளைத் ஏற்படுத்தின. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த சாதி வெறி இதற்கும் முன்னரே துவங்கிவிட்டது.

saadhiveri4இந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் வள்ளலார், அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா நீதிக்கட்சித்தலைவர்களான பெரியார் போன்றோர் தீவிரமான எதிர்த்து இயக்கம் கண்டனர். இந்தியா முழுவதும் பல தலைவர்கள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுத்தனர். அவர்களில் அண்ணல் அம்பேத்கர், பூலே, நாராயண குரு போன்றோர் முக்கியமானவர்கள். கடந்த நூற்றாண்டில் இவர்கள் சாதிவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியும் தீண்டாமைக்கொடுமை நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இளவரசன்களும், வெமுலாக்களும், மேலும் ஆயிரக்கணக்கானோரும் இந்த வெறிக்கு பலியாகிவருகின்றனர்.

saadhiveri1மனசாட்சியுள்ளவர்கள் இக்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மனசாட்சியற்ற மனித குலத்திற்கு எதிரானவர்கள் இந்த சிக்கலின் மூலத்தை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடித்து இக்கொலையை நியாயப்படுத்திவருவது, மனித நேயவாதிகளின் நெஞ்சில் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது. சாதிவெறி ஒழிந்து மனிதநேயம் வளராமல் இந்தியா ஒருநாளும் வளமான நாடாகாது. 6 வழிப்பாதைகளும், 24 மணிநேர மின்சார வசதிகளும், அடுக்குமாடி கட்டிடங்களும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றாது. இந்தியாவைப் பிடித்த சனியன் இந்த சாதிவெறியும், மதவெறியும் இவை என்று ஒழிகிறதோ அன்றுதான், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படும், அதுவரை பின்னடைந்த ஏழைநாடுதான் இந்தியா.

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே”

-          ’அருட்பெருஞ்சோதி’ இராமலிங்க வள்ளலார்

தீண்டாமைக்கொடுமை ஒழியும் நாள் என்றோ அந்நாள்தான் நமக்கு பொன்னாள்!

—————–

தன் இன்னுயிரை தியாகம் செய்யுமுன் ரோகித் விமுலா எழுதிய கடிதம்:

Good morning, I would not be around when you read this letter. Don’t get angry on me. I know some of you truly cared for me, loved me and treated me very well. I have no complaints on anyone. It was always with myself I had problems. I feel a growing gap between my soul and my body. And I have become a monster. I always wanted to be a writer. A writer of science, like Carl Sagan. At last, this is the only letter I am getting to write. I always wanted to be a writer. A writer of science, like Carl Sagan. I loved Science, Stars, Nature, but then I loved people without knowing that people have long since divorced from nature. Our feelings are second handed. Our love is constructed. Our beliefs colored. Our originality valid through artificial art. It has become truly difficult to love without getting hurt. The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number. To a thing. Never was a man treated as a mind. As a glorious thing made up of star dust. In every field, in studies, in streets, in politics, and in dying and living. I am writing this kind of letter for the first time. My first time of a final letter. Forgive me if I fail to make sense. My birth is my fatal accident. I can never recover from my childhood loneliness. The unappreciated child from my past. May be I was wrong, all the while, in understanding world. In understanding love, pain, life, death. There was no urgency. But I always was rushing. Desperate to start a life. All the while, some people, for them, life itself is curse. My birth is my fatal accident. I can never recover from my childhood loneliness. The unappreciated child from my past. I am not hurt at this moment. I am not sad. I am just empty. Unconcerned about myself. That’s pathetic. And that’s why I am doing this. People may dub me as a coward. And selfish, or stupid once I am gone. I am not bothered about what I am called. I don’t believe in after-death stories, ghosts, or spirits. If there is anything at all I believe, I believe that I can travel to the stars. And know about the other worlds. If you, who is reading this letter can do anything for me, I have to get 7 months of my fellowship, one lakh and seventy five thousand rupees. Please see to it that my family is paid that. I have to give some 40 thousand to Ramji. He never asked them back. But please pay that to him.

from that. Let my funeral be silent and smooth. Behave like I just appeared and gone. Do not shed tears for me. Know that I am happy dead than being alive. “From shadows to the stars.” Uma anna, sorry for using your room for this thing. To ASA family, sorry for disappointing all of you. You loved me very much. I wish all the very best for the future. For one last time, Jai Bheem I forgot to write the formalities. No one is responsible for my this act of killing myself. No one has instigated me, whether by their acts or by their words to this act. This is my decision and I am the only one responsible for this. Do not trouble my friends and enemies on this after I am gone.


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா”

அதிகம் படித்தது