மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிவகாசி அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 9 பேர் பலிOct 20, 2016

சிவகாசி அருகே பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

siragu-sivagaasi

தீபாவளி சமயம் என்பதால் பட்டாசுகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக ஆட்டோ ஒன்றில் அடுக்கப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கிடங்கின் அருகில் மருத்துவ பரிசோதனை ஸ்கேன் நிலையம் ஒன்று இருந்தது. அதனால் விபத்து நேரத்தில் ஸ்கேன் நிலையம் வந்த நோயாளிகளும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டனர்.

2 தீயணைப்பு வாகனத்தில் 20 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிவகாசி அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 9 பேர் பலி”

அதிகம் படித்தது