மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 57

கி.ஆறுமுகம்

Apr 18, 2015

bose1என்.சி.முகர்ஜி குழு ஜப்பானுக்குச் சென்று போசின் அஸ்தி என்று கூறும் சாம்பலை அறிவியல் சோதனைக்கு உட்படுத்தியது. பின்னர் போசு இராணுவ மருத்துவமனையில் உயிர் இழந்த போது அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் சிலரை விசாரணை செய்தது. இந்த விசாரணையில் 7 முக்கிய நபர்களிடம் குழு விசாரித்தது.

1. சுமன் சட்டோபாத்யாய்: இவர் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர், ஆனந்த பஜார் என்ற பெங்காலி தினப் பத்திரிகையாளர். இவர் போசு இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இவரை அழைத்து விசாரணை குழு எதன் அடிப்படையில் நீங்கள் போசு இறந்துவிட்டார் என்று கூறுகிறீர்கள், உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? என்று கேட்டனர். அதற்கு சுமன் சட்டோபாத்யாய், நான் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிலரை நேரில் கண்டு சில ஆய்வுகளை செய்தேன், அதன் அடிப்படையில் தான் போசு இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டேன். என்னிடம் வேறு ஆதாரங்கள் இல்லை என்றார்.

2. டாக்டர் லட்சுமி ஷெகல்: முன்னாள் இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர் மற்றும் ஜான்ஸி ராணி படைப்பிரிவின் தலைவர். இவரிடம் நீங்கள் போசு இறந்துவிட்டார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்றனர் குழு. அதற்கு டாக்டர் லட்சுமி ஷெகல், என்னிடம் ஆதாரங்கள் இல்லை, நான் தாய்பே-யில் விபத்து நடைபெறும் போது அங்கு இல்லை. நான் இந்திய தேசிய இராணுவத்தில் உறுப்பினர் மட்டும்தான் என்றார்.

3. கேப்டன் பரீந்திர கர்மாகர்: இவரிடம் குழு, நீங்கள் எப்படி போசு இறந்துவிட்டார் என்று கூறுனீர்கள் என்றனர். அதற்கு கேப்டன் பரீந்திர கர்மாகர் நான் ஹபிபுர் ரஹமானைச் சந்தித்து பேசிய பின் கூறினேன் என்றார்.

4. பிரணாப் முகர்ஜி: இவரிடம் குழு, நீங்கள் எப்படி போசு இறந்துவிட்டார் என்று கூறினீர்கள் என்றனர். அதற்கு இரண்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூறினேன் என்றார்.

5. நட்வர்சிங்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர். இவரிடம் குழு, நீங்கள் ரூடால்ஃப் ஹர்டோக் எழுதிய The sign of the Tiger subhas Chandra Bose and his Indian legion in Germany – 1941-45 என்ற புத்தகத்தை விமர்சனம் செய்தீர்களா? என்றனர். அதற்கு ஆம் என்றார் நட்வர்சிங். போசு இறந்துவிட்டார் என்று எப்படி தெரிவித்தீர்கள்? என்ற குழுவின் கேள்விக்கு, அவர் உங்களுக்கு முன் அறிக்கை கொடுத்த இரண்டு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்தேன் என்றார்.

subash36. Dr.டானியோஷி யோஷிமி: தாய்பேய் இராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்.

குழு: விபத்து நடந்ததும் உங்கள் மருத்துவமனைக்கு போசு அழைத்து வரப்பட்டாரா?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம்.

குழு: போசு அப்போது உயிரோடு இருந்தாரா?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம், நான் சிகிச்சை அளித்தேன். பின்னர் இரவு அவர் இறந்துவிட்டார்.

குழு: நீங்கள் இறப்பு சான்றிதழ் அளித்தீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம், அவரது உடல் எரியூட்டுவதற்கு தாய்பே அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அதற்கு இறப்பு சான்றிதழ் வேண்டும் என்றனர், நான் கொடுத்தேன்.

குழு: நீங்கள் அதில் உங்கள் கையொப்பம் இட்டுள்ளீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம்

குழு: அவர் இறப்புக்குக் காரணம் குறிப்பிட்டிருக்கிறீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம், General burning all over the body, degree three

குழு: நீங்கள் அவரின் முழுப் பெயர் எழுதினீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: இல்லை எனக்கு எனது அலுவலர்கள் சந்திரபோசு என்று தெரிவித்தனர், அதனை மட்டும் நான் எழுதியிருந்தேன்.

குழு: உங்களுக்கு அவரின் முழுப் பெயர் சுபாசு சந்திர போசு என்பது தெரியாதா?

Dr.டானியோஷி யோஷிமி: இல்லை எனது பணியாளர்கள் கூறிய பெயரை நான் எழுதினேன், அவர்கள் சுபாசு சந்திர போசு என்று எனக்கு தெரிவிக்கவில்லை.

குழு: நீங்கள் இறப்பு சான்றிதழில் வேறு ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: இல்லை.

குழு: நீங்கள் அவர் இறந்த போது வயது குறிப்பிட்டுள்ளீர்களா?

Dr.டானியோஷி யோஷிமி: எனக்கு தற்போது நினைவில் இல்லை நான் வயதை குறிப்பிட்டு இருந்தேனா இல்லையா என்று.

குழு: நீங்கள் இந்த சான்றிதழை யாரிடம் கொடுத்தீர்கள்?

Dr.டானியோஷி யோஷிமி: என் அலுவலக அதிகாரியிடம்.

குழு: நீங்கள் போசு உடலில் வேறு ஏதேனும் நோய்கள் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தீர்களா அவர் இறப்புப் பற்றி?

Dr.டானியோஷி யோஷிமி: ஆமாம், நான் அவர் இறப்பு Third degree burns என்று குறிப்பிட்டிருந்தேன்.

குழு: நீங்கள் அவரது உடலை எரியூட்டுவதற்கு தேதியை குறிப்பிட யாருக்கு அதிகாரம் (cremation permit in) என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?

Dr.டானியோஷி யோஷிமி: நான் Taiwanஇராணுவ அதிகாரிகள் அனுமதி தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

தேதி 18.08.1945 (இது முகர்ஜி கமிஷன் அறிக்கை பக்கம் 60 வழ 70)

7. ஹீசாமுதின் கபாஸி: நீங்கள் எப்படி போசு இறந்துவிட்டார் என்று கூறுகிறீர்கள் ஆதாரம் உள்ளதா? என்று கேட்ட குழுவிற்கு, இல்லை என்று பதில் கூறினார் ஹீசாமுதின் கபாஸி.

subash4குழு அனைவரையும் விசாரணை செய்து, பின்னர் Shri Trikha, Shri Isoda என்பவர்களை விசாரித்தது. இவர்கள் போசு ரசிய எல்லைப்பகுதிக்கு சென்றிருந்தார், இது மிகவும் ரகசியமாக செயல்படுத்தப்பட்ட திட்டம் என்றனர்.

ரசியாவின் இராணுவ அதிகாரி ஒருவரிடம் விசாரணை செய்த போது, போசு 1940ல் இரண்டாம் உலகப்போரின் போர் சூழலில் ரசிய பகுதிகளில் சில காலம் தங்கியிருந்தார் என்றார். இதற்கு ஆதாரம் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டனர் குழு. அதற்கு இராணுவ அதிகாரி என்னிடம் இல்லை, ஆதாரம் வேண்டுமெனில் நீங்கள் ரசியாவின் மிக முக்கியமான இரகசியங்கள் இராணுவ விவரங்கள் அடங்கிய பகுதிகளுக்குச் சென்று பாருங்கள் என்று தெரிவித்துவிட்டார்.

பின்னர் குழு, விபத்து நடந்த இடத்தில் சென்று விசாரணை நடத்தியது. விமான நிலையத்தில் விபத்து நடந்ததிற்கான ஆதாரம் இல்லை, மருத்துவமனையில் பதிவேடுகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை, தாய்பேப் நகராட்சி அலுவலகத்தில் போசு உடல் எரியூட்டப்பட்டதிற்கு அனுமதி அளித்த விவரங்கள் இல்லை, எரியூட்டப்பட்டதிற்கு ஆதாரம் இல்லை.

குழு பிரிட்டனிடம் சென்றது. போசுடன் சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்டதற்கு பிரிட்டன் ஒத்துழைக்கவில்லை. நேரு எழுதிய கடிதங்களைக் கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ரசியாவின் இராணுவத்தினை தொடர்பு கொண்டு போசுடன் சார்ந்த விவரங்களைத் தரவேண்டும் என்றது குழு. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் பல அச்சுறுத்தல்கள் வந்தது, இத்துடன் உங்கள் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று. இந்திய அரசாங்கத்தின் மூலம் நியமனம் செய்யப்பட குழுவுக்கு பாதுகாப்பு இல்லை. இதில் இருந்தே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் இந்திய அரசு போசின் விவரங்களை மறைக்க நினைக்கிறது என்று.

குழு மீண்டும் வேறு விதத்தில் போசு இறந்திருப்பாரா என்று விசாரிக்கத் தொடங்கியது.

bose121. போசு Red Fort–ல் இறந்தார் என்று கூறப்படுவதைப் பற்றி விசாரித்தது. இதில் Usha Ranjan Bhattachariee என்ற இவர் கல்கத்தாவில் இருப்பவர். குழு இவரை விசாரித்தது, இவர் ஆகஸ்ட் 15, 1945-ல் போசை இந்திய தேசிய இராணுவத்தின் பயிற்சி இடம் சேரேபோன் (seramban) என்ற இடத்தில் கைது செய்து, இரவிலேயே எவரும் அறியாத வகையில் டெல்லி செங்கோட்டைக்கு அழைத்து வந்து சுட்டுக் கொன்று விட்டனர் என்றார். குழு இதற்கு ஆதாரம் உள்ளதா உங்களிடம் என்றனர். அதற்கு இவர் பதில் இல்லை, எனது கருத்து என்றார்.

2. விமான விபத்தில் இறந்துவிட்டாரா என்று விசாரணை செய்தது. இந்த விசாரணையில் போசு சென்ற இடம் அனைத்தும், அவருடன் சென்றவர்கள் என்று முழு விவரத்தினையும், விபத்து நடந்தது என்று கூறப்படும் இடம் மருத்துவமனை என்று அனைத்தையும் விசாரணை செய்தது. முதல் இரண்டு குழுவின் அறிக்கையையும் பரிசீலினை செய்தது. பின்னர் மருத்துவ சான்றிதழை சரிபார்த்தது, காவல் துறை அதிகாரியின் சான்றிதழை சரிபார்த்தது, எரியூட்டுவதற்கு அனுமதி வழங்கிய சான்றிதழை பார்த்தது.

மருத்துவர் டானியோஷி யோஷிமி குழுவிடம் குறிப்பிடும் போது, போசு இறந்த சில தினங்களுக்குப் பிறகு எரியூட்டப்பட்டது என்பது பொய், உடனே எரியூட்டப்பட்டது. ஜப்பான் இராணுவ அதிகாரிகள் என்னிடம் உடனே எரியூட்டுவதற்குத் தேவையான அதிகார சான்றிதழ்களை அளிக்கும்படி கேட்டனர். அது போர் சூழல் என்பதனால் என்னிடம் போசின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றனர். நான் Hachiro okhura என்பவரின் பெயரை குறிப்பிட்டேன். இவர் இருதயம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த ஜப்பானியர். இதன் பின்னர் குழு போசு விமான விபத்தில் இறந்தார் என்பது ஜப்பானியர் சொல்லும் கட்டுக்கதை அவர் உண்மையில் விமான விபத்தில் இறந்துபோகவில்லை.

குழு எரியூட்டிய இடத்தில் வேலை செய்தவரை Li chin qui மற்றும் Tan chi ch என்பவர்களை விசாரணை செய்தது.

குழு: எரியூட்டும்போது உடன் யார் இருந்தனர்.

ஜப்பானியர்கள்: ஜப்பான் டைரக்டர் (Director) மற்றும் சில ஜப்பானிய இராணுவ அதிகாரிகள். இந்தியர் எவரும் இல்லை.

குழு: நீங்கள் எரியூட்டுவதற்கு முன்பு உடலை பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறிப்பீர்களா?

ஜப்பானியர்கள்: ஆமாம், ஆனால் ஜப்பான் அதிகாரிகள் இவரது உடலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இவர் மிக உயர்ந்த இந்திய தலைவர் என்றனர்.

குழு: உங்களுக்கு அவர் பெயர் தெரியுமா தெரியாது?

ஜப்பானியர்கள்: ஜப்பான் அதிகாரிகள் சந்திர போசு என்று கூறினார்கள்.

குழு: உடல் எப்படி இருந்தது?.

ஜப்பானியர்கள்: மிகவும் பெரிய உடலாக இருந்தது. (முகர்ஜி அறிக்கை பக் 103,104)

குழு: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக பணி செய்கிறீர்கள்?

ஜப்பானியர்கள்: 10 ஆண்டுகளாக.

குழு: உங்களுக்கு எரியூட்ட மருத்துவர் சான்றிதழ் இருந்தால் போதுமல்லவா?

ஜப்பானியர்கள்: ஆமாம், மருத்துவர் சான்றிதழ் அவசியம் வேண்டும், உடன் எவரும் இருக்க வேண்டும் என்பதில்லை.

விசாரணை குழுவின் முன் ஹபிபுர் ரஹமான் போசு உடல் எரியூட்டப்பட்டது தேதி ஆகஸ்ட் 20, 1945, ஜப்பான் ஆவணங்களின் படி ஆகஸ்ட் 21, 1945 இது முரண்பாடாக அமைந்துள்ளது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 57”

அதிகம் படித்தது