சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- இறுதிப் பகுதி- 58
கி.ஆறுமுகம்Apr 25, 2015
போசு, டேராடூன்(Dehradun) என்ற இடத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1977ல் இறந்தார். Shoulmari என்ற பெயரில் உள்ள ஆசிரமத்தில் சாதுவாக உள்ளார், இந்த இடம் பங்களாதேஷ், பூடான் மற்றும் நேபாளம் (Nepal) ஆகிய நாடுகளின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்திருந்தது. போசு இந்த ஆசிரமத்தில் சாதுவாக இருக்கிறார் என்ற கருத்து மக்களிடத்தில் 1961ல் மிகத் தீவிரமாகப் பரவியது. இதனை குழு விசாரித்தது. விசாரணைக்கு 11 நபர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் போசு என்றும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் போதுமான ஆதாரங்கள் எவரும் கொடுக்கவில்லை. மேலும் குழு போசின் சில கடிதங்களை எடுத்து, ஆசிரமத்தில் இருந்த சாது எழுதிய கடிதத்தினுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தது. மேலும் சாதுவைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கும் போது சாது கிழக்கு பெங்கால் தற்போது பங்களாதேஷ் நாட்டில் சிறந்த பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் போசு Kayasthya குடும்பத்தில், கட்டாக்கில், ஒரிசா மாநிலத்தில் பிறந்தவர் என்று அனைத்துத் தகவல்களையும் குழு ஆராய்ந்தது.
இந்த குழுவுக்கு முன் போசின் மரணத்தை விசாரித்த Khosta குழுவும் இந்த ஆசிரமத்தையும் அதில் இருந்த சாதுவைப் பற்றியும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த சாது போசு இல்லை என்று தெரிவித்திருந்தது. இதனையும் முகர்ஜி குழு ஆராய்ந்தது, பின் போசு அந்த ஆசிரமத்தில் இறக்கவில்லை என்று தெரிவித்தது. மக்களிடம் மற்றொரு கருத்து இருந்தது. அதாவது போசு Sheopurkalan என்ற இடத்தில் சாதுவாக இருந்து 1977ல் இறந்தார் என்று, இதனையும் முகர்ஜி குழு விசாரணை செய்தது மக்களிடம். இந்திய விடுதலை போராட்டத்தின் போது ஒரு விமானம் விபத்துக்குள்ளானது, Pandola என்ற கிராமத்தில் அந்த விமானத்தில் சாது, கலோனல் ஹபிபுர் ரஹமான் மற்றும் ஹிட்லர் இருந்தனர் என்றும், இந்த சாது கிராமத்தில் வந்து ஆற்றங்கரை ஓரத்தில் Jyotirdev என்ற பெயர் கொண்டு இருக்கிறார், இவர்தான் போசு என்றனர். குழு 5 பேரிடம் விசாரணை செய்தது. இங்கு இவர் மிக நீண்ட நாட்களாக இருக்கிறார், இவர் பெயர் Jyotirdev, இவர் மே 21, 1977ல் இறந்தார் என்றனர். விசாரணையின் முடிவில் போசு இங்கு இறக்கவில்லை என்றது குழு. பின்னர் போசு Faizabad-ல் இறந்தார் என்று குழு விசாரணையைத் தொடங்கியது.
போசு ரசியாவின் அதிபர் ஸ்டாலின் இறந்ததும், 1953ல் போசு ரசியாவில் இருந்து தப்பித்து இந்தியா வந்து உத்திரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் இருந்துவிட்டு பின் Rambhawan-ன் Faizabadல் இருந்தார் என்று மக்கள் பேசிக்கொள்வதாக குழு விசாரணையில் தெரியவந்தது. அங்கு இருந்த சாதுவின் DNA போசின் DNA-வா என்று குழு ஆய்வு செய்தது. மற்றும் மக்கள், போசு உத்திரப் பிரதேசத்தில் பல இடங்களில் வாழ்ந்தார் என்றும், இவர் Gumnami Baba மற்றும் Bhagwanji என்ற இரண்டு பெயர்களில் வாழ்ந்தார் என்றும் நம்பினார்கள். இதனை குழு 31-நபர்களிடம் விசாரணை செய்தது. அந்த விசாரணையில் சாது செப்டம்பர் 16,1985-ல் இறந்தார் என்றனர். Gumnami Baba, செய்தித்தாள்களில் பல கட்டுரை எழுதியிருந்தார். அதனை பரிசீலனை செய்தது குழு. Saraswati Devi Shukla என்பவர் Bhagwanji-உடன் இருந்தவர். இவர் குழுவிடம் தெரிவித்தது. ஆசிரமத்தில் Bhagwanji-யைப் பார்ப்பதற்கு கல்கத்தாவில் இருந்து சில முக்கியத்தவர்கள் போசின் பிறந்த தினம் ஜனவரி 23 மற்றும் துர்கா பூசை தினம் இந்நாட்களில் ஒவ்வொருவருடமும் தொடர்ந்து வந்து அவரை சந்திப்பார்கள். ஒரு சிறுதிரை மறைவில் இவர்கள் பேசுவார்கள் என்று தெரிவித்தார். இவர் கூறிய அனைவரையும் குழு விசாரணை செய்தது. பின்னர் ஆய்வுகளும் இரத்த பரிசோதனை ஆய்வுகளும் செய்து விசாரணையை முடித்த பின்னர் 1985ல் போசு Faizabad-ல் இறந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை.
இந்த முகர்ஜி குழு அனைத்து விதத்திலும் போசுடன் சார்ந்த அனைத்து கோப்புகளையும் மற்றும் அவர் சென்ற இடங்களுக்குச் சென்று அனைத்து ஆய்வுகளையும் முடித்தது. பின்னர் குழு இந்திய அரசிடம் போசைப் பற்றிய கோப்புகளை ஆய்வு செய்வதற்கு அனுமதி கேட்டதற்கு இந்திய அரசு சில கோப்புகளை குழுவிடம் தரமுடியாது, அது under sections 123 and 124 of the Evidence Act and Article 74(2) of the constitution of India என்று தெரிவித்தது. இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கோப்புகளை தரமுடியாது என்று அரசு தெரிவித்தது. முகர்ஜி குழு தனது விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தயாரித்தது. அதில் ஜப்பானில் ரங்கோஜி கோவிலில் உள்ள சாம்பல் போசு சாம்பல் என்று கூறுவது தவறு. அது போசின் சாம்பல் இல்லை. ஒரு ஜப்பானிய இராணுவ வீரருடையது. அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர் என்றும்,
இறுதி அறிக்கையில்:
-
போசு தற்போது இறந்திருப்பார். இன்று அவர் உயிருடன் இருக்க முடியாது.
-
அவர் விமான விபத்தில் இறக்கவில்லை.
-
ஜப்பான் கோவிலில் இருப்பது போசின் சாம்பல் இல்லை.
-
அவர் எப்படி இறந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
இந்த மூன்றாவது முகர்ஜி அறிக்கையானது, முதலில் அமைத்த இரண்டு குழுவின் அறிக்கையை முற்றிலும் நிராகரித்தது. முதல் இரண்டு குழுவும் போசு விமானவிபத்தில் இறந்தார் என்று அறிக்கை வழங்கியது. மூன்றாவது குழு விமான விபத்தில் இறக்கவில்லை என்று அழுத்தமாக தனது விசாரணையின் கருத்தை பதிவு செய்தது. இந்த அறிக்கையின் முடிவை தயார் செய்து அரசிடம் நவம்பர் 8 2005ல் கொடுத்தது. ஆனால் நமது நாடாளுமன்றத்தில் மே-17-2006ல் பரிசீலனைக்கு வந்தது. அப்போதைய இந்திய அரசு அறிக்கையை பரிசீலனை செய்து, அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துவிட்டது. இதில் இருந்து தெளிவாக தெரிகிறது, அரசு எதை எதிர்பார்க்கிறது? ஒரு தூய்மையான உண்மையான சுதந்திரப் போராட்ட வீரரின் வரலாற்றை மறைக்க முயல்கின்றது, இல்லை இல்லை போசை முற்றிலும் மறைக்கிறது அரசு. இன்னும் எத்தனை குழு அமைத்தாலும் போசின் மர்மங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். போசு எங்கு சென்றார், எங்கு வாழ்ந்து இறந்தார் என்று எவரும் நிரூபிக்க முடியாது. அவர் மக்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இறக்காமல். போசின் மர்மங்கள் தொடரும் எனது வரலாற்று பதிவுகளில். இது முடிவல்ல இதுதான் தொடக்கம்.
வாசகர்களுக்கு நன்றி.
உதவிய நூல்கள்:
- இந்தியப் போர்
பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட நூல்
-நேதாஜி சுபாசு சந்திரபோசு
- நேதாஜியின் வீர வரலாறு- பாகம்1,2
-சிவலை இளமதி
- விடுதலைப் போரில் தமிழகம் – பாகம்1,2
சிலம்புச்செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம்
- பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்
-முனைவர் பேரா.க.செல்வராஜ்
- பிரபாகரன் வழிகாட்டி நேதாஜி 100
-சபீதா ஜோசப்
- வீரத்திருமகன் தேவர் குரல் – மாத இதழ்
- மேடைமணி மாத இதழ் – ச.நடராசன்
- சுபாசு மர்மங்களின் பரம பிதா
– மருதன் மற்றும் முகர்ஜி கமிஷனின் அறிக்கை
இணையத்தில் இருந்து:
-முற்றும்
கி.ஆறுமுகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும்- இறுதிப் பகுதி- 58”