மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்புJan 27, 2017

அக்டோபர் 24ம் தேதியுடன் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர்.

Siragu chennai highcourt

இத்தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இதுவரை மூன்று முறை நடைபெற்றது. இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் பலமுறை அவகாசம் கேட்டது. இதையடுத்து இன்று இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் காலஅவகாசம் அளிக்க மறுத்ததுடன், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை குறித்த இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு”

அதிகம் படித்தது