சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை என்ன?
Feb 10, 2017
தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி இவ்வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாது, பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி புதியதாக தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மாநில தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது, இதற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கு ரத்து செய்து உத்தரவிட்டதற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது உயர்நீதிமன்றம்.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எடுத்த நடவடிக்கைகள் எனென்ன? என்றும், அல்லது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் ஏன்? என்ற கேள்விகளையும் எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த மாநில தேர்தல் ஆணையம், மாநில அரசு தாங்கள் கேட்டதை செய்து தரவில்லை என்று புகார் தெரிவித்ததையடுத்து, இவ்வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை என்ன?”