சென்னை உயர்நீதிமன்றம்: பிறமொழி மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம்
Feb 27, 2017
தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி கடந்த 2006 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் போன்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அவரவர் தாய்மொழியிலேயே 10ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பிறமொழி மாணவர்கள், அவரவர் தாய்மொழியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று(27.02.17) நடைபெற்றது. அதில் பிறமொழி மாணவர்கள், அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவால் முப்பதாயிரம் பேர் பயனடைவர் என்று கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: பிறமொழி மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம்”