சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 4 வரை மழை
Nov 28, 2016
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
மேலும் இது தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 1 முதல் 4 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 4 வரை மழை”