சென்னை வானிலை ஆய்வு மையம்: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Jan 27, 2017
வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ளது.
புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட கிழக்குக் கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை படிப்படியாக நகர்ந்து மன்னார் வளைகுடா முதல் வட தமிழகம் வரை பரவி வருவதால் கனமழை பெய்வது உறுதி என்று கூறியுள்ளார் பாலச்சந்திரன்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு”