சென்னை வானிலை மையம்: தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும்
May 24, 2017
தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் நூறு டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதால் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. எனினும் தமிழகம் முழுவதிலும் வெப்பநிலை அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று(24.05.17) வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 102 டிகிரி பதிவாகும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை மையம்: தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும்”