மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மஞ்சேரி மாணவர்களுக்கு சிறகின் வெள்ளநிவாரண உதவி

சிறகு சிறப்பு நிருபர்

Jan 16, 2016

nivaarana nidhi15சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் ‘செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு’ உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் 200ஆவது வார்டாக இருந்த போதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோமையர் மலை ஒன்றிய எல்லைக்குள் உள்ளது. ஆகவே, இங்குள்ள மக்கள் சென்னைக்கும் காஞ்சிபுரத்துக்குமாக அலைக்கலைக்கப்படுகிறார்கள். இங்கு சுமார் 6,700 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதம் உள்ளவற்றில் சென்னை மாநகரின் 23 குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதன் விவரம்:

1.சீனிவாசபுரம், 2. நொச்சிக்குப்பம், 3. தியாகராய நகர், 4. நம்பிக்கை நகர், 5. திடீர் நகர், 6.சத்யா ஸ்டுடியோ அருகில், 7. ஸ்டாலின் நகர், 8.கோட்டூர்புரம், 9.தனக்கோடிபுரம், 10. நுங்கம்பாக்கம், 11.மைலாப்பூர், 12.தேனாம்பேட்டை, 13.சைதாப்பேட்டை, 14. ஓட்காட் குப்பம், 15. ஓசூர் குப்பம், 16. திருவான்மியூர் குப்பம், 17. சூளைமேடு, 18. பெசன்ட் நகர், 19. அடையார், 20. பட்டினப்பாக்கம், 21. டுமீங் குப்பம், 22. சத்யா நகர், 23. பாரதியார் நகர்.

இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள். இவர்கள் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக உள்ளனர். முன்பு,இவர்களின் வாழ்வாதாரம் அருகிலேயே இருந்தது. இப்போது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையான சூழலில் வசிக்கின்றனர்.

-தோழமை வெளியீடு

nivaarana nidhi14மேலே விவரிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதி வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. செம்மண் 10 ஏரி என்பதே செம்மஞ்சேரி என்று மருவியதாகக் கூறப்படுகிறது. ஆறு கிலோ மீட்டர் முக்கிய சாலையிலிருந்து பயணித்து இவ்விடத்தை அடையவேண்டும் என்பதானாலேயே எவ்வித நிவாரண உதவிகளும் உடனடியாக இங்கு வசித்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. மிகவும் ஏழைகளும், மறுகுடியமர்த்தப்பட்ட விளிம்புநிலை மக்களும் வாழும் இப்பகுதியில் ஏராளமான பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவரத்தை தோழமை நிறுவனத்தின் மூலம் அறிந்த சிறகு இணைய இதழ் இயன்ற அளவிற்கு உதவி செய்ய முடிவு எடுத்தது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு வேண்டிய குறிப்பேடுகள், எழுதுகோல், சாப்பாட்டு பை, தண்ணீர் புட்டி போன்றவை நூற்று எழுபத்து ஐந்து எண்ணிக்கை வழங்கப்பட்டது.

nivaarana nidhi11செம்மஞ்சேரியில் ஏராளமான விதவைகள், அனாதைக் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்ட்ட குழந்தைகள், அரவாணிகள், முதியோர் போன்றவர்கள் இன்னும் உதவிகளை அரசிடமிருந்தும், கொடையாளிகளிடமிருந்து எதிர்பார்த்தவண்ணம் இருக்கின்றனர். சிறகின் வாசகர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தால் சிறகு முன்னின்று சரியான பயனாளிகளுக்கு நிவாரணம் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். அவ்வாறு உதவ விரும்புபவர்கள் news@siragu.comஎன்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

nivaarana nidhi1

nivaarana nidhi2

nivaarana nidhi3

nivaarana nidhi4

nivaarana nidhi5

nivaarana nidhi6

nivaarana nidhi7nivaarana nidhi8

nivaarana nidhi9

nivaarana nidhi10

nivaarana nidhi12

nivaarana nidhi13

nivaarana nidhi16

nivaarana nidhi17


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மஞ்சேரி மாணவர்களுக்கு சிறகின் வெள்ளநிவாரண உதவி”

அதிகம் படித்தது