மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மரம் கடத்தியதாக மேலும் 18 தமிழர்கள் கைதுNov 23, 2016

சென்ற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிடச் சென்ற 32 தமிழர்களை செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சித்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

siragu-semmaram

இவர்களில் 22 தமிழர்களை நேற்று ஜாமீனில் விடுதலை செய்தது திருப்பதி நீதிமன்றம். இதைத் தொடர்ந்து நேற்றைய தினமே மேலும் 35 தமிழர்களை செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் மீண்டும் இன்று செம்மரம் கடத்தியதாக மேலும் 18 தமிழர்களை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மரம் கடத்தியதாக மேலும் 18 தமிழர்கள் கைது”

அதிகம் படித்தது