மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மரம் வெட்ட வந்ததாக 35 தமிழர்களை ஆந்திர காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்



Nov 22, 2016

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக 35 தமிழர்களை கைது செய்துள்ளது ஆந்திர காவல் துறை அதிகாரிகள். கைது செய்யப்பட்ட தமிழர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி செம்மரம் வெட்டுவதற்காக அழைத்துச்சென்று பின் கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்கின்றனர்.

siragu-semmaram

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் செம்மரம் கடத்த முயன்றதாக 20 தமிழர்களை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை அதிகாரிகள். இந்நிலையில் ஆந்திர அரசு கைது செய்யப்பட்ட 22 தமிழர்களை இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், செம்மரம் வெட்ட வந்ததாக 35 தமிழர்களை ஆந்திர காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைப்பர் என தெரியவருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மரம் வெட்ட வந்ததாக 35 தமிழர்களை ஆந்திர காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்”

அதிகம் படித்தது