மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் மனு தள்ளுபடிDec 30, 2016

மணல் கான்ட்ராக்டர் மற்றும் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையில் 147கோடி ரொக்கமும், 130கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் இவர் கைது செய்யப்பட்டார்.

siragu-sekar-reddy

இதையடுத்து சேகர் ரெட்டியின் உறவினர் சீனிவாசலு, நண்பர் பிரேம், தொழில் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவருக்கு நெருக்கமாக இருந்த ராம மோகன் ராவ் மற்றும் அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி விஜயலட்சுமி 5 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது