ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 14பேர் பலி
Jan 27, 2017
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் நேற்று(26.01.17) பனிச்சரிவு ஏற்பட்டது. இப்பனிச்சரிவில் 10பேர் உயிரிழந்தனர். பலியான வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பனிச்சரிவில் பலியான தமிழக வீரர், தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 27 வயதான இளவரசன் என்ற தமிழக வீரரின் இந்த மரணத்தால் அவரது உறவினரும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சோகத்தில் உள்ளனர்.
நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை 10பேர் என்று உள்ள நிலையில், இன்று ஜம்மு-காஷ்மீர் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலியானவர்களுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பனிஹால் தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மீட்ப்புப்பணி நடந்து வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 14பேர் பலி”