ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக்
Jan 19, 2017
தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பெண்கள் என பலரும் கலந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் நாளை(20.01.17)போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்ட்ரைக்கில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை(20.01.17)டாக்சி, ஆட்டோ, வேன் ஆகியவையும் இயங்காது என அறிவித்துள்ளது. கோவையில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை லாரிகள் இயங்காது என கோவை மாவட்ட லாரிகள் சம்மேளம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பத்து லட்சம் வாகனங்கள் இயங்காது என தெரியவருகிறது. அதனால் அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக்”