மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு: சென்னை, மதுரையில் ரயில்களை மறித்து இளைஞர்கள் போராட்டம்



Jan 19, 2017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரக் கோரி போராட்டம் நடத்தி வரும் இளையஞர்கள் தமிழக அரசுக்கு பகல் 12 மணி வரை கெடு விதித்திருந்தனர்.

Siragu jallikattu5

அதனால் தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தினார். அதற்கு பிரதமர் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இருப்பதால் தற்போது தம்மால் இயலாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து 12 மணியைக் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை போராட்டக் குழுவினர் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்திலும் காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு: சென்னை, மதுரையில் ரயில்களை மறித்து இளைஞர்கள் போராட்டம்”

அதிகம் படித்தது