மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறைJan 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், ஆர்வலர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டு போராடி வருகிறார்கள்.

Siragu schools

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாளை(20.01.17)தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பிரைமரி, நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என அப்பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன ஸ்ட்ரைக் காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை”

அதிகம் படித்தது