மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு தொடர்பான இரண்டு அறிக்கைகளை திரும்பப் பெற்றது மத்திய அரசுJan 24, 2017

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி, அதை தமிழக சட்டசபையில் சட்டமாக மாற்றியது.

இந்நிலையில் மத்திய அரசு 2011 மற்றும் 2016ல் வெளியிட்டுள்ள இரண்டு அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

siragu-supreme-court

அதன்படி 2011ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியிலில் காளையை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது அப்போதைய மத்திய அரசு. மேலும் 2016 ம் ஆண்டு தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா போன்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தற்போது மத்திய அரசு 2011, 2016 ல் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுதாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் இனி ஜல்லிக்கட்டுக்கு தடை இருக்காது என்று கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு தொடர்பான இரண்டு அறிக்கைகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு”

அதிகம் படித்தது