ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது
Jan 24, 2017
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடைபெற்று வந்தது. போராட்டத்தையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் இயற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது.
நேற்று(23.01.17) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டமானது சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை மெரினாவில் போராட்டக்காரர்களிடம் சட்ட முன் வரைவு நகலை காண்பித்து போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை வெளியிற்றினர். இது பின் கலவரமாக மாறியது. இதில் 92 பேருந்துகள் சேதமடைந்தது. இதில் போராட்டக்காரர்கள், காவல் அதிகாரிகள் என பலர் காயமடைந்தனர். பின போராட்டக்கார்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது”