ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் விடிய விடிய போராட்டம்
Jan 19, 2017
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் உள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இத்தடைக்குக் காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் போராடி வருகிறார்கள்.
மூன்றாவது நாளாக இன்றும்(19.01.17) போராட்டம் நீடிக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சி உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் போராட்டம் மேலும் தீவிரமடையும் நிலை உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் விடிய விடிய போராட்டம்”