மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்Feb 24, 2017

அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு இன்று அவருடைய பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெ.,-வின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

Siragu edappady palanisamy

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைமை செயலகத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார் முதல்வர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்”

அதிகம் படித்தது