ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை ஒப்படைத்தது எய்ம்ஸ்
Mar 6, 2017
சென்ற வருடம் செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று சந்தேகங்களை எழுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இவரைத் தொடர்ந்து பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதா-வுக்கு அளிக்கப்பட சிகிச்சைகள் குறித்து அறிக்கை வேண்டும் என்று தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கேட்டிருந்தது.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். டெல்லி எய்ம்ஸ் துணை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இந்த அறிக்கையை அளித்துள்ளார். இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை ஒப்படைத்தது எய்ம்ஸ்”