மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதா மரணம் குறித்த பதில் மனுவை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ தாக்கல்Feb 23, 2017

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜெயலலிதா 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பினால் மரணமடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

siragu-jayalalitha

மரணமடைந்த மாநில முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்துள்ளார். அவரது மரண அறிக்கையை தமிழக அரசும், அப்பல்லோ நிர்வாகமும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக-வைச் சேர்ந்த ஜோசப் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனையும் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று(23.02.17) உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவில் ஜெயலலிதா-வின் விருப்பப்படியே அவரது புகைப்படங்களை வெளியிடவில்லை என்று அப்பல்லோ கூறியுள்ளது. மேலும் நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று எம்சிஏ விதிகளின் படி உள்ளதால் ஜெயலலிதா-வின் புகைப்படத்தை வெளியிடவில்லை என்று அப்பல்லோ அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இவ்வழக்கு மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதா மரணம் குறித்த பதில் மனுவை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ தாக்கல்”

அதிகம் படித்தது