மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்போராட்டம்Mar 16, 2017

தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கடந்த இரண்டு நாட்களாக மண்டையோடு மற்றும் மண் சட்டி ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

siragu-farmers

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் போராட்டத்தின் போது நேற்று, அகிலன் மற்றும் ரமேஷ் என்ற விவசாயிகள் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தனர். மற்ற விவசாயிகள், அந்த இருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்போராட்டம்”

அதிகம் படித்தது