மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிNov 22, 2016

கடந்த நவம்பர் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் போன்ற 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படுகிறது. ஓட்டுகள் எண்ணப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உரிய பாதுகாப்புடன் ஓட்டு எண்ணப்படுகிறது. இன்று காலை 9 மணியிலிருந்து முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இம்மூன்று தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில்,

siragu-election-result

தஞ்சாவூர்:

தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி 27,853 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 99362.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ் 42,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 1,13032.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 88068.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி”

அதிகம் படித்தது